இயந்திரமயமாகிவிட்ட இன்றைய நவீன உலகம் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. ஒருபுறம் இது நன்மை அளித்தாலும், மறுபுறம் இதனால் பல தீமைகள் விளைகின்றது. இந்த கண்டுபிடிப்புகளால் மனிதர்கள் மென்மையுடன் நடப்பதில்லை. எப்போதும் பரபரவென்று இருப்பது, பார்க்கும் நபர்கள் மீது எரிந்து விழுவது, சிறிய விஷயத்திற்கும் கடுமையாக நடந்து கொள்வது என செயல்படுகின்றனர். மொத்தத்தில் மென்மை என்னும் பொக்கிஷத்தை புறக்கணித்தவர்களாக உள்ளனர். மென்மையை இழந்தவன் நன்மையை இழப்பான். இறைவன் மென்மையான இயல்புடையவன். அவன் மென்மையை விரும்புகிறான். ஒருவர் மென்மையை கைக்கொள்ளும் போது அவருக்கு நற்கூலியை அருள்கிறான்.