சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நடந்தது. இப்பகுதியில் விவசாயம் செழிக்க வேண்டி கிராமத்தார்கள் சார்பில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் புரவி எடுப்பு விழா நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு அக். 17ம் தேதி இரவு இந்த விழா நடந்தது. புரவி பொட்டலில் இருந்து பக்தர்கள் சந்திவீரன் கூடத்திற்கு ஊர்வலமாக புரவியை சுமந்து வந்தனர். அங்கு கிராமத்தார்கள் சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அங்கிருந்த வெண்கல புரவியுடன் சேர்ந்து சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலுக்கு புறப்பட்டு சென்றது. வழிநெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து புரவியையும் அய்யனாரையும் வழிபட்டனர்.