Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

இன்றைய செய்திகள் :
சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ... கோயில்களில் கோ பூஜை: ஹிந்து அறநிலையத்துறை உத்தரவு கோயில்களில் கோ பூஜை: ஹிந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹிந்து பாரம்பரியத்துக்கு அமெரிக்காவில் அங்கீகாரம்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
10:28

 வாஷிங்டன் : அமெரிக்கா முழுதும் அக்டோபர் மாதம் ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக 20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்கள் தசராதுர்கா பூஜை நவராத்திரி தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை அக்டோபரில் கொண்டாடுகின்றனர். அமெரிக்காவில் வசிக்கும் ஹிந்துக்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. மொத்தமுள்ள 50 மாகாணங்களில் டெக்சாஸ் நியூ ஜெர்சி ஜார்ஜியா புளோரிடா மிச்சிகன் உட்பட 20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அரசு வெளியிட்டு உள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: யோகாவில் இருந்து உணவு வரை பண்டிகைகளில் இருந்து தொண்டு வரை நடனம் இசை அஹிம்சை தத்துவங்கள் என அமெரிக்கர்களின் வாழ்வில் ஹிந்து கலாசாரம் இன்றியமையாத பங்கு வகித்துள்ளது.எனவே ஹிந்துக்களின் பங்களிப்புக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட முடிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவ. 4ல் கொண்டாடப்படுவதால் இந்த பாரம்பரிய மாத கொண்டாட்டத்தை மேலும் சில வாரங்கள் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து 5ம் நாளான இன்று (8ம் தேதி) ... மேலும்
 
temple
திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி மலைப் பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் நம்பி கோயிலில் சுவாமி ... மேலும்
 
temple
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், 12 நிரந்தர உண்டியல்கள், ஒன்பது தட்டுக்காணிக்கை உண்டியல்கள் ... மேலும்
 
temple
திருநெல்வேலி: பாளை அரியகுளம் மேலக்குளம் வாராகி அம்மன் கோயிலில் இன்று (8ம் தேதி) பஞ்சமி பூஜை நடைபெற்றது. ... மேலும்
 
temple
மடத்துக்குளம்: மடத்துக்குளம் சோழமாதேவியில் குங்குமவல்லி அம்மன் குலசேகர சுவாமி கோவிலில் சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.