Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கடகம்: மனதில் உறுதி வேண்டும் கடகம்: மனதில் உறுதி வேண்டும் கன்னி : மனப்பக்குவம் உண்டாகும் கன்னி : மனப்பக்குவம் உண்டாகும்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிம்மம்: குரு பார்க்க கோடி நன்மை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2021
15:59


மகம்: ஞாயிறு போற்று

குருவின் பார்வை ஜென்ம ராசியின் மீது விழுவதால் எந்த ஒரு விஷயத்திலும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். சூரியனை ராசி அதிபதி ஆகவும் கேதுவை நட்சத்திர அதிபதி ஆகவும் கொண்டிருக்கும் நீங்கள் கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் இந்த ஐந்து மாத காலத்தில் மனதில் இருந்த குழப்பங்கள் அகன்று நிம்மதி காண்பீர்கள். எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறுவதால் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் காலம் இது. ஆறாம் இடத்திலிருந்து ஏழாம் இடத்திற்கு வரும் குருபகவான் தனது நேரடிப் பார்வையை உங்கள் ராசியில் மீது செலுத்துவதால் குருபலத்தினை அடைகிறீர்கள். குரு பார்க்க கோடி நன்மை என்பது போல் தடைபட்டிருந்த உங்கள் ஆசைகளும் விருப்பங்களும் நிறைவேறும். வெளியுலகத் தொடர்பின் மூலம் பல்வேறு புதிய விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். இதனால் உங்கள் வாழ்வியல் தரம் உயரும்.

நிதி : லாப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் தனலாபம் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து பொருள் வரவினைக் காண்பீர்கள். சேமிப்பு உயர்வடையும். மியூச்சுவல் பண்ட்ஸ், ஷேர்மார்க்கெட் ஆகியவை பயன் தரும். ஜாதகத்தில் தசாபுக்தியின் நிலை நன்றாக இருக்கும் பட்சத்தில் கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடலாம். புதிய வீடு கட்டுவதற்காக காத்திருப்போருக்கு கால நேரம் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்கள் உபயோகத்திற்கு கை கொடுக்கும்.

குடும்பம் : குருவின் அருளால் குடும்பத்தில் நிலவி வரும் பிரச்னைகளை ஒன்றன்பின் ஒன்றாக முடிவிற்கு கொண்டு வருவீர்கள். உடன்பிறந்தோர் உங்கள் முயற்சிக்கு துணை நிற்பார்கள். பகையாளிகளாக இருந்த பங்காளிகள் உறவு நாடி வரக்கூடும். உறவினர்கள் வழியில் நல்லவர் யார் தீயவர் யார் என்பதை பிரித்து அறிந்து கொள்வீர்கள். தம்பதியருக்கிடையே இணக்கம் கூடும். பிள்ளைகளின் செயல்கள் பெருமை தேடித் தரும் வகையில் அமையும்.

கல்வி : குருவின் பார்வையால் சுறுசுறுப்புடன் படிக்க உள்ளீர்கள். நண்பர்களோடு இணைந்து கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பது நல்லது. வேதியியல், உயிரியல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவர்கள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காண்பார்கள். கலைத்துறை மாணவர்கள் தங்கள் தகுதியை வளர்த்துக் கொள்வர். பள்ளி, கல்லுாரிகளில் நடக்கும் போட்டிகளில் தனித்துவம் காட்டி வெற்றி பெறுவீர்கள். விளையாட்டுத்துறையில் மாணவர்கள் சிறப்பாக ஒளி வீசுவார்கள்.

பெண்கள் : குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். சொல்வாக்குடன் வலம் வருவீர்கள். இதனாலேயே உங்கள் பொறுப்புகள் அதிகரிக்கக் காண்பீர்கள். வீட்டு வேலையில் ஓய்வின்றி உழைப்பீர்கள். கணவரின் ஆலோசனைகள் உங்கள் வெற்றிக்கு துணை செய்யும். பள்ளிக்கால ஆசிரியை ஒருவரை சந்திக்க நேரிடும். குடும்பப் பெரியவர்கள் தங்கள் தேவைக்கு உங்களையே பெரிதும் சார்ந்திருப்பார்கள். நேரம் காலம் பாராமல் பொறுப்பினை நிறைவேற்றுவதில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.

உடல் நிலை: குருவின் அருளால் மருத்துவ செலவுகள் குறையும். சர்க்கரை வியாதி, இரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சற்று அதிகப்படியான அலைச்சலினால் உடலில் அவ்வப்போது அசதி உண்டாகும். உடல்நலக் குறைவிற்கு உடனடி மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. முதுகு வலி, நெஞ்சடைப்பு, வாய்வுப்பிடிப்பு ஆகிய அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

தொழில் : பணியாளர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். அலுவலகத்தில் கடுமையான பணிச்சுமையை சந்திக்க நேரிடும். மேலதிகாரிகளோடு கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்புண்டு. எந்தச் சூழலிலும் நிதானத்தோடு அனுசரித்துச் செல்வது நல்லது. ஷேர் மார்க்கட், புரோக்கர் தொழில், கமிஷன், தரகு, ஏஜன்சீஸ் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். மருத்துவம், ராணுவம், போக்குவரத்து துறைகளைச் சார்ந்தவர்கள் ஏற்றம் காண்பார்கள். தொழில்முறை எதிரிகள் காணாமல் போவார்கள். சிறுதொழில் செய்வோர் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். ஓட்டல், நகைக்கடை அதிபர்கள் நல்ல லாபத்தினை அடைவார்கள்.
பரிகாரம் : தினமும் காலையில் சூரிய வழிபாடு செய்து வாருங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
    வெள்ளத்தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
     உள்ளத்து அனையது உயர்வு.

பூரம்: திருவினை வென்று வாழ்

குருபலத்தினைப் பெறும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தருகிறது. உங்களுடைய எண்ணங்களிலும், சிந்தனைகளிலும் அதிகப்படியான பொறுப்புணர்ச்சி வெளிப்படும். நீங்கள் சந்திக்க வேண்டும் என நினைத்திருந்த முக்கியமான நபர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு இந்த நேரத்தில் உருவாகும். நினைத்த செயலை செய்து முடிக்கும் வரை ஓய மாட்டீர்கள். ராசிநாதனாக சூரியனையும் நட்சத்திர அதிபதியாக சுக்ரனையும் கொண்டிருக்கும் நீங்கள் பொதுக்காரியங்களில் முன்னின்று செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்போர் வெற்றி பெறுவார்கள். உங்களது செயல்களில் அசாத்திய வேகத்தினை உணர்வீர்கள். ஒரு வேலையை நாளை என்று தள்ளிப்போடக்கூடாது என்ற எண்ணத்துடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

நிதி : குருபலத்தின் காரணமாக சேமிப்பு நிலை உயர்வடையும். வாழ்க்கைத்துணையின் பெயரில் புதிய சொத்து வாங்கும் வாய்ப்புண்டு. அடுத்தவர்களுக்கு நிதியுதவி செய்யும்போது அவர்களின் தரம் அறிந்து செயல்படுவது நல்லது. வீட்டினில் தங்கம், வெள்ளிப் பொருட்கள் சேரும். வாராக்கடன்களை வசூல் செய்ய கால நேரம் சாதகமாக அமைந்திருக்கிறது. அரசுத் தரப்பில் இருந்து எதிர்பார்த்து காத்திருந்த நிதியுதவி வந்து சேரும் நேரமிது.

குடும்பம்: குருவின் அருளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தம்பதியருக்குள் இணக்கம் அதிகரிக்கும். பெரியவர்களின் ஆலோசனைகள் உங்கள் வெற்றிக்கு துணை நிற்கும். தகப்பனாரின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. நெருங்கிய உறவினர் ஒருவரோடு கொண்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். தாய்மாமன் வழியில் ஒரு சிலர் பிரச்னையை சந்திக்க நேரலாம். உங்களது நேரடியான அணுகுமுறை மூலம் எல்லாப் பிரச்னையையும் சரிசெய்து விடுவீர்கள்.

கல்வி : மாணவர்கள் கல்வி நிலையில் ஏற்றம் பெறுவார்கள். குருவின் பார்வையால் நினைவாற்றல் கூடும். அவசரப்படாமல் படிக்கும் பாடத்தினை நிதானமாக உள்வாங்கி படித்தீர்களேயானால் வெற்றி நிச்சயம். பாடங்களை எளிதில் கிரஹித்துக் கொள்வீர்கள். மருத்துவத்துறையில் உயர்கல்வி பயில விரும்புவோர்க்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகும். வணிகவியல், பொருளாதாரம், வரலாறு, மொழியியல் துறை மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள்.

பெண்கள் : குடும்பத்தில் நிலவி வரும் சலசலப்புகளுக்கு கணவரின் துணையுடன் முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நெருங்கிய உறவினர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கத் துவங்கும். வீட்டினில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளில் உங்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும். பெண் குழந்தைகளின் நடவடிக்கைகளில் சிறப்பு கவனம் தேவை. விதவிதமாக சமைப்பதில் ஆர்வம் கொள்வீர்கள். நகைகள், விலையுயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்தி வைக்கும்போது எங்கே வைக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

உடல்நிலை : குருவின் பார்வை பலம் உடல்நிலையை கட்டிக் காக்கும். வண்டி வாகனங்களை இயக்கும்போது எச்சரிக்கை தேவை. முகத்தினில் கட்டிகள், கொப்புளங்கள் போன்றவை உண்டாகும் வாய்ப்புண்டு. உஷ்ண உபாதைகளை தவிர்க்க அவ்வப்போது இளநீர் பருகி வருவது நன்மை தரும்.

தொழில் : உங்கள் நட்சத்திர அதிபதி சுக்ரனின் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதாலும் அதுவே தொழில் ஸ்தானமாக அமைந்திருப்பதாலும் குருவின் பார்வை ராசியின் மீது விழுவதாலும் தொழில்முறையில் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். பணியாளர்கள் பெருமைக்காக கூடுதல் பொறுப்பினை சுமக்க நேரிடும். அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். பொன், வெள்ளி போன்ற ஆபரணத்தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைவார்கள். வங்கி, இன்ஷ்யூரன்ஸ் துறையினருக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. சிறுதொழில் செய்வோர் வெளியில் நிலுவையில் உள்ள பாக்கித் தொகைகளை வசூலிக்கவும் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்து கொள்ளவும் நேரம் சாதகமாக அமைந்துள்ளது.
பரிகாரம் : சனி தோறும் சக்கரத்தாழ்வாரை வழிபடுங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
    பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
     எண்ணிய தேயத்துச் சென்று.

உத்திரம் 1ம் பாதம் : பெரிதினும் பெரிது கேள்

நீண்ட நாட்களாக காத்திருந்த வாய்ப்பு ஒன்று தற்போது குருவின் பார்வை பலத்தால் வந்து சேரும். நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு உங்கள் திறமையை மற்றவர்களுக்கு புரிய வைப்பீர்கள். உங்கள் பணிகளுக்கு தடையாக இருந்தவர்கள் தானாக விலகிச் செல்வார்கள். ராசி மற்றும் நட்சத்திரம் இரண்டிற்கும் அதிபதி சூரியனே என்பதால் சுயகவுரவத்திற்கு அதிக முக்கியத்துவம் தருவீர்கள். பிரச்னைக்குரிய நேரத்தில் அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். மூன்றாம் இடத்தின் மீது விழும் குரு பகவானின் சிறப்புப் பார்வை மனதில் தைரியத்தை அதிகரிக்கச் செய்யும். சிந்தனையில் தோன்றுவதை உடனடியாக செயல்படுத்துவதில் வெற்றி காண்பீர்கள். இடைத்தரகர்களால் இடைஞ்சலைக் காண நேரிடும் என்பதால் முக்கியமான பணிகளுக்கு நீங்களே நேரடியாக செல்வது நல்லது.
நிதி : குருபகவான் ஜென்ம ராசியை கவனித்து வருவதால் பொருளாதார நிலை உயர்வடையக் காண்பீர்கள். வீடு, மனை போன்ற அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு உருவாகும். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பாக்கித்தொகை ஒன்று இந்த நேரத்தில் வசூலாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். நிலுவையில் உள்ள சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமான முடிவினைக் காணும்.

குடும்பம் : குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். தாயார்வழி உறவினர்களிடம் கவனத்தோடு பழக வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணையின் வார்த்தைகள் உங்கள் வெற்றிக்குத் துணை நிற்கும். பிள்ளைகளின் வழியில் பெருமை தரும் சம்பவங்கள் நடக்கக் காண்பீர்கள். வீட்டினில் சுபநிகழ்ச்சிக்கான சகுனங்கள் துவங்கும்.

கல்வி : குருவின் பார்வையால் சோம்பல் தன்மை நீங்கி புத்துணர்வைப் பெற்றுள்ளீர்கள். எழுத்து வலிமை கூடியிருப்பதால் நிறைய மாதிரித் தேர்வுகளை எழுதிப் பார்க்கவும். நண்பர்களோடு இணைந்து கூட்டுப் பயிற்சிகளில் பங்கேற்பது நல்லது. வேதியியல், உயிரியல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவர்கள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காண்பார்கள். விளையாட்டுத்துறை மாணவர்கள் தங்கள் தகுதியினை வளர்த்துக் கொள்வர்.

பெண்கள் : தோற்றத்தில் பொலிவு கூடும். பிள்ளைகளின் உடல்நிலையிலும் மன நிலையிலும் கவனம் செலுத்து வேண்டியது முக்கியம். அவர்களது செயல்களை கண்காணித்து அவ்வப்போது தகுந்த புத்திமதிகளைத் தன்மையாகச் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துங்கள். கணவரின் வாயிலாக பல வழிகளிலும் நன்மை காண்பீர்கள். அவரோடு இணைந்து செயல்படும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். முடிவெடுக்க இயலாத சூழலில் கணவரின் ஆலோசனைகள் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுத் தரும்.

உடல்நிலை : கடுமையான பணிச்சுமையின் காரணமாக ஒரு சிலர் முதுகுவலி, தோள்வலி போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும். தோல் சம்பந்தமான நோயினால் அவதிப்பட்டு வருபவர்கள் நிவாரணம் காண்பார்கள். குருவின் பார்வையால் பெண்களுக்கு கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகள் காணாமல் போகும். வயிற்றினை பட்டினி போடாமல் நேரத்திற்கு சாப்பிட வேண்டியது அவசியம். விரத நாட்களில் திரவ உணவினையாவது உட்கொள்வது உடல்நலத்தினைக் காக்கும். மற்றபடி தேக ஆரோக்யம் சீராக இருந்து வரும்.

தொழில் : பணியாளர்கள் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவர். ஒரு சிலர் வேலை செய்யும் நிறுவனம் மூலமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பினை அடைவர். மருத்துவம், சட்டம் ஒழுங்கு, கல்வித்துறை சார்ந்தோர் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி, கேட்டரிங், தரகுத் தொழில் செய்பவர்கள் குறிப்பிடத்தகுந்த லாபத்தினை அடைவார்கள். தொழிலதிபர்கள், வியாபாரிகள் தங்கள் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்ள சரியான நேரம் இது. தொழிலதிபர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களால் நன்மை அடைவார்கள். பெட்டிக்கடை, குடிசைத்தொழில், தின்பண்டங்கள் விற்பனை போன்ற சிறுதொழில் செய்வோர் பெருத்த அளவில் முன்னேற்றம் காண்பார்கள்.
பரிகாரம் : திங்கள் தோறும் ஐயப்பனை வணங்கி அன்னதானம் செய்யுங்கள்.
பின்பற்ற வேண்டிய திருக்குறள் :
    அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்
     பெற்றான் பொருள் வைப்பு உழி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன பட்டனப்பிரவேச விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் ... மேலும்
 
temple
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவத்தில் நேற்று இரவு பெருமாள் ... மேலும்
 
temple
பழநி: பழநியில் விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. பழநியில் விடுமுறை நாளை ... மேலும்
 
temple
கமுதி: கமுதி காமாட்சி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மே ... மேலும்
 
temple
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.