சூரனை சம்ஹாரம் செய்த முருகன் (திருச்செந்துாரில் இவரை ஜெயந்திநாதர் என்று அழைப்பர்) பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருள்வார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அர்ச்சகர் அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். ‘சாயா’ என்றால் ‘நிழல்’ எனப்பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். இதை முருகப்பெருமானே கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இத்துடன் சூரசம்ஹார வைபவம் நிறைவடையும்.