சூலூர், சுல்தான்பேட்டை வட்டாரத்தில் சூரசம்ஹார விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10நவ 2021 04:11
சூலூர்: சூலூர், சுல்தான்பேட்டை வட்டார முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடந்தது.
சூலூர் வட்டாரத்தில் முருகன் கோவில்களில் கடந்த, 5:ம்தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. கருமத்தம்பட்டி அடுத்த சென்னியாண்டவர் கோவிலில் தினமும் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. நேற்று மாலை சூரசம்ஹார விழா நடந்தது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பலர் பங்கேற்று வழிபட்டனர். சுல்தான்பேட்டை அடுத்த செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவிலில் நேற்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சப்பரத்தில் முருகப்பெருமான் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். இன்று திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.