திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் ஹிந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2021 05:11
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றவேண்டும் என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றத்தில் அவர் கூறியதாவது: முந்தைய காலங்களில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்தது. தற்போது மோட்ச தீபம் ஏற்றும் பகுதியில் ஏற்றப்படுகிறது. மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற 25 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம். நவ., 18ல் ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மலை உச்சியில் தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் ஹிந்து முன்னணி ஏற்றும்.ரஜினி நடித்த படத்தை உதயநிதி வாங்கி உள்ளார். அதனால் தியேட்டர்களில் 100 சதவீதம் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. பஸ்கள், தியேட்டர்கள், பள்ளிகளில் வராத கொரோனா கோயில்களுக்கு செல்வதால் எப்படி வரும்.கோயிலில் வழிபடுவதன் மூலம் நோய்கள் நீங்கும் என மக்கள் நினைக்கின்றார்கள். மக்களின் எண்ணங்களுக்கு அரசு மரியாதை கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.