போத்தனூர்: குறிச்சி அரவான் திருவிழா நேற்று காலை ஊர் பெரிய தனக்காரர்கள் முன்னிலையில், வேள்வி வழிபாடுடன் துவங்கியது. மதியம் சிறப்பு வழிபாடு. தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது. இரவு மறு பூஜையுடன் விழா நிறைவடைந்தது. திரளான மக்கள் பங்கேற்று, அரவானை வழிபட்டுச் சென்றனர்.