பதிவு செய்த நாள்
29
நவ
2021
03:11
திருப்பூர்: திருப்பூர், ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு வீரராகவப் பெருமாள் கோவில் தெப்பத்தில் ஐயப்பனுக்கு ஆறாட்டு உற்சவம் நடந்தது.
திருப்பூர், காலேஜ் ரோடு ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், 62வது ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த 17ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.வரும் 24ம் தேதி, பக்தர்களின் சரண கோஷங்களுக்கு மத்தியில் மண்டல பூஜை உற்சவ கொடியேற்றம் நடந்தது. நேற்று, மகா கணபதி ஹோமம், நவகலச அபிஷேகம், பறையெடுப்பு, தாயம்பகை மேளம் ஆகியவை நடந்தன. பறையெடுப்பில், நெல், அரிசி, பூ, நாணயம், தேங்காய், மஞ்சள், அவல் ஆகிய பொருட்கள் கொண்டு நிறைபடி வைத்து வழிபாடு செய்தனர். இன்று, பெருமாள் கோவிலில், ஐயப்பன் ஆராட்டுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. சபரிமலை ஐயப்பன் கோவில் தந்திரி, கண்டரு மோகனரு தலைமையில் பெருமாள் கோவில் குளத்தில் ஆராட்டு நடைபெற்றது. ஸ்ரீ ஐயப்பன் பக்த ஜன சங்கம், ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.