பதிவு செய்த நாள்
29
நவ
2021
04:11
பசவனகுடி ; வரலாற்று பிரசித்தி பெற்ற பெங்களூரு கடலைக்காய் திருவிழா, பசவனகுடி தொட்ட கணபதி கோவிலின் சுற்றுப்பகுதிகளில் இன்று துவங்குகிறது.
வியாபாரிகள் ஏற்கனவே, கடைகளை வைத்துள்ளனர்.கன்னட கார்த்திகை மாதத்தின், கடைசி திங்கட் கிழமையான இன்று, வரலாற்று பிரசித்தி பெற்ற கடலைக்காய் திருவிழா துவங்குகிறது.பெங்களூரின் சுற்றுப்பகுதி மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த கடலைக்காயை, கொண்டு வருவர். இவர்களிடமிருந்து கடலைக்காய் வாங்கி, கடலைக்காய் திருவிழாவில் விற்கும் வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகம்.பசவனகுடி சாலையின், ராம கிருஷ்ணா ஆசிரமத்திலிருந்து, கோவில் வரையிலான இடங்கள், மிகவும் முக்கியமானதாகும்.
இங்கு மக்கள் அதிகம் கூடுவர்.வியாபாரம் அதிகரிக்கும் என்பதால், இந்த இடங்களில், கடை வைக்க வியாபாரிகள் போட்டி போடுவர். திருவிழா துவங்குவதற்கு, மூன்று நாட்கள் முன்னதாகவே, மாநகராட்சி அடையாளம் காண்பித்த இடங்களில் முகாமிட்டுள்ளனர். திருவிழா முடியும் வரை, இங்கேயே வசிப்பர்.இங்கு இடம் கிடைக்காதவர்கள், ஹனுமந்தநகர், கவி கங்காதரேஸ்வரர் பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில், கடலைக்காய் விற்பனைக்கு இடம் தேடி வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளாக, கொரோனாவால் கடலைக்காய் திருவிழா சரியாக நடக்கவில்லை. இம்முறை நன்றாக வியாபாரம் நடக்க வேண்டும் என பிரார்த்தனை செய்துள்ளனர்.போக்குவரத்து மாற்றம்இதற்கிடையில், பசவனகுடி புல் டெம்பிள் சாலையில், வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக பெங்களூரு போக்குவரத்து பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:பெங்களூரு பசவனகுடி தொட்ட கணபதி கோவிலில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 1 வரை, கடலைக்காய் திருவிழா நடக்கவுள்ளது.
எனவே புல் டெம்பிள் சாலையில், வாகன போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.லால்பாக் மேற்கு நுழைவு வாசல் பகுதியிலிருந்து, ஹனுமந்த்நகருக்கு செல்லும் வாகனங்கள், பசவனகுடி சாலையின் ராமகிருஷ்ணா ஆசிரமம் அருகில் வலது புறம் திரும்பி ஹயவதன ராவ் சாலையில் சென்று, கவிபுரத்தின் 3வது குறுக்கு சாலை வழியாக, மவுன்ட்ஜாய் சாலையில், ஹனுமந்தநகரை அடையலாம்.ஆர்.வி.டீச்சர்ஸ் கல்லுாரி ஜங்ஷன் பகுதியிலிருந்து, ஹனுமந்தநகருக்கு வரும் வாகனங்கள், தாகூர் சதுக்கத்தில், வலது புறம் திரும்பி, காந்தி பஜார் பிரதான சாலை வழியாக, ஆஸ்ரம ஜங்ஷன், ஹயவதன ராவ் சாலையில் சென்று, கவிபுரத்தின் 3வது குறுக்கு சாலை மூலமாக, ஹனுமந்த நகருக்கு செல்லலாம்.தியாகராஜநகர், பனசங்கரி பகுதிகளிலிருந்து, சாம்ராஜ்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள், பசவனகுடி சாலையின் காமத் மைத்ரி நிவாஸ் ஜங்ஷனில்,
இடது புறம் திரும்பி, 3வது பிரதான சாலையின், நாராயணசாமி சதுக்கத்தில், கே.ஜி.நகர் பிரதான சாலைக்கு சென்று, ஹயவதன ராவ் சாலை, ராமகிருஷ்ண ஆஸ்ரமம் வழியாக, சாம்ராஜ்பேட் செல்ல வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.