ராமேஸ்வரம் கோயிலில் கோடி தீர்த்தம்: பக்தர்கள் ஏமாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09டிச 2021 10:12
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கோடி தீர்த்தம் விற்பனை நிறுத்தியதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் உள்ள தீர்த்தங்களில் 22வது தீர்த்தமான கோடி தீர்த்தம் அனைத்து தீர்த்தங்களையும் நீராடிய மகிமை கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனால் பக்தர்கள் நீராடி தரிசித்த பின், கோயிலில் விற்கும் கோடி தீர்த்தம் பாட்டிலை வாங்கி செல்வார்கள். இதனால் தினமும் 3 ஆயிரம் தீர்த்த பாட்டில்கள் விற்கும். ஆனால் கடந்த சில நாட்களாக கோடி தீர்த்த பாட்டிலுக்கு தட்டுப்பாடு நிலவி விற்பனை மந்தமாக இருந்த நிலையில், நேற்று முழுவதுமாக விற்பனை இன்றி, பிரசாத கடை வெறிச்சோடி கிடந்தது. தீர்த்த தலமான இக்கோயிலில் கோடி தீர்த்தம் கிடைக்காமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தீர்த்தம் காலி பாட்டிலுக்கு ஆர்டர் போட்டும் வர தாமதமானதால், பாட்டிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. நாளை முதல் தட்டுப்பாடு இன்றி கோடி தீர்த்தம் விற்கப்படும் என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.