கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில், கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். கழுகுமலையில் வர்த்தக சங்கத்தினர் சார்பில்,ஒவ்வொரு ஆண்டும் கழுகாசலமூர்த்தி கோயிலில் பாலாபிஷேக விழா கோலாகலமாக நடைபெறும். இந்நிலையில், நேற்று 83வது ஆண்டு பாலாபிஷேகவிழா நேற்று நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு, கீழபஜாரில் உள்ள தனலட்சுமி ஜவுளிகடை முன் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் பால்குடம் எடுத்து கிரிவலம் வந்து கோயில்வந்து சேர்ந்தனர். பின்னர் கழுகாலமூர்த்திக்கு மதியம் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கழுகுமலை வர்த்தக சங்கத்தினர் செய்திருந்தனர். கழுகுமலை இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.