என்.வைரவன்பட்டி கோயில்: பிப். 6 ல் கும்பாபிஷேகம்: யாகசாலைக்கு முகூர்த்தக்கால்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2021 05:12
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே என்.வைரவன்பட்டி கோயிலுக்கு பிப். 6 ல் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளதை அடுத்து யாகசாலைக்கு முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. திருப்புத்துார் அருகே என்.வைரவன்பட்டி வளரொளிநாதர் உடனாய வடிடையம்பாள், வைரவர் சுவாமி கோயிலுக்கு கடந்த 2008 ல் கும்பாபிேஷகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு பின் நடைபெற வேண்டிய கும்பாபிேஷகம் கொரானா பாதிப்பால் தாமதமாகியது. இந்தாண்டு திருப்பணிகள் நடந்தது. கோபுரம்,விமானங்கள்,மூலிகை ஓவியங்கள் புதுப்பிக்கப்பட்டது. அர்ச்சகர் குடியிருப்பு, பெண்டிர் நல விடுதி பராமரிக்கப்பட்டது. புதிதாக வைரவர் வளாகம் சமூதாயக் கூடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது திருப்பணி முடிந்து பிப்.6 ல் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது., நேற்று முன்தினம் காலை யாகசாலை அமைக்க முகூர்த்தக்கால் நடப்பட்டது. பிள்ளையார்பட்டி பிச்சைக் குருக்கள் தலைமையில் பூஜைகள் நடந்தது. ஏற்பாட்டினை திருப்பணிக்குழு தலைவர் மீனாட்சிசுந்தரம், செயலர் வைரவன், துணைத் தலைவர் லெட்சுமணன்,இணைச் செயலர் நாராயணன்,பொருளாளர் லெட்சுமணன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.