கமுதி அருகே கருப்பண்ண சாமி கோயில் பால்குடம் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2021 05:12
கமுதி: கமுதி அருகே சம்பக்குளம் கிராமத்தில் கருப்பணசாமி கோயில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு 108 பால்குடம் அபிஷேகம் நடந்தது. கமுதி அருகே சம்பக்குளம் கிராமத்தில் கருப்பணசாமி கோயில் வருஷாபிஷேக விழா முன்னிட்டு பால்குடம் திருவிழா நடந்தது.விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர்.காலை 6 மணிக்கு கணபதி ஹோமம்,யாகசாலை பூஜையுடன் தொடங்கி 108 மூலிகை பொருட்களால் பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.பின்பு செம்பவளம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் விநாயகர் கோயிலில் இருந்து முக்கிய வீதிகளில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். கருப்பணசாமிக்கு பால் அபிஷேகம் உட்பட 21 வகையான அபிஷேகம் நடந்தது.கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்டது.கிராமமக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.