பதிவு செய்த நாள்
16
டிச
2021
06:12
அவிநாசி: சேவூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா, வரும், 20ம் தேதி நடக்கிறது. கொங்கு ஏழு ஸ்தலங்களில் வைப்பு தலமாகவும், நடுச்சிதம்பரம் என போற்றக்கூடியதுமான, அவிநாசி அருகே உள்ள சேவூரில், அறம் வளர்த்த நாயகி உடனமர் வாலீஸ்வரர் கோவில் உள்ளது.6:00 மணிக்கு, சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் திருவாதிரை நாச்சியாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது. திருவாதிரை நாச்சியார், சிறப்பு அலங்காரத்துடன், பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதையடுத்து, இரவு11:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெறும். 20ம் தேதி, காலை, 9:00 மணிக்கு நடராஜ பெருமாள் உடனமர் சிவகாமி அம்பாளுக்கு பல்வேறு திரவிய சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மதியம், 12:00 மணிக்கு நடராஜ பெருமானுக்கு, ராக தாளங்கள் வாசிக்கப்பட்டு மலர்களால் சுவாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை மற்றும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கால், ஆண்டுதோறும் நடைபெறும் சுவாமி திருவீதி உலா, இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.