புதுச்சேரி: காந்தி வீதி வரதராஜ பெருமாள் கோவிலில், மார்கழி மாத திருப்பாவை சொற்பொழிவு இன்று 16ம் தேதி முதல் துவங்குகிறது.புதுச்சேரி காந்தி வீதியில் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், மார்கழி மாத முதல் நாளான இன்று 16ம் தேதி முதல் ஜனவரி 12ம் தேதி வரை, தினசரி காலை 7:00 மணி முதல் காலை 8:30 மணி வரை, திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ரன் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். ஏற்பாடுகளை வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் தேவஸ்தானம் செய்து வருகிறது.