ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில் தெப்பத்தை பராமரிக்க ஹிந்து அறநிலையத்துறை, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோயிலில் 800 ஆண்டுகளை கடந்த வரலாற்று சிறப்புமிக்க தொன்மையான கோயில் ஆகும். மழைக்காலத்தில் சிற்றோடை வழியாக வரும் நீர் கோயில் எதிரில் உள்ள கண்மாயில் தேங்கும் நீரால் இப்பகுதியில் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படும். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தெப்பத்தில் தேங்கிய நீரே கோயிலின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. கடந்த 15 ஆண்டுக்கு முன்பு ஊராட்சி நிர்வாகம் மூலம் கோயில் தெப்பம் சீரமைக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையால் தெப்பத்தில் சிறிதளவு நீர் தேங்கியுள்ளது. தெப்பத்தில் சேரும் குப்பையால் தேங்கிய நீரும் பாதிப்படைகிறது. தற்போது தெப்பத்தில் படிக்கட்டுகள் சரிந்துள்ளது. தேங்கிய நீருடன் குப்பை சேர்வதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.