பதிவு செய்த நாள்
18
டிச
2021
01:12
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நந்தவனத்தை, ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை, அகற்ற வேண்டுமென, அரசுக்கு ஹிந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள, வைணவ ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இக்கோவிலுக்கு சொந்தமான நந்தவனம், காரமடை தெப்பக்குளம் அருகே தோலம்பாளையம், மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ளது. இந்த நந்தவனத்தில் பயிர் செய்யப்படும் மலர் செடிகளில் இருந்து, சாமிக்கு பூக்கள் எடுத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் நந்தவனத்தில், சாலையோரம் சிலர் ஆக்கிரமிப்பு செய்து, கட்டடங்கள் கட்டியுள்ளனர். மேலும் இங்கு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது. இதனால் கோவிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே மேட்டுப்பாளையம் வருவாய்த்துறையினர், நந்தவன இடத்தை சர்வே செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, புனித தீர்த்த குளம், ஏழு கடல் குளம் ஆக்கிரமிப்பை அகற்ற இந்து சமய அறநிலையத் துறையும், அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து முன்னணி மாநில பேச்சாளர் மனோகரன் அறிக்கையில் கூறியுள்ளார்.