பெரியகுளம்: பெரியகுளம் அழகர்சாமி புரம் துளசி அம்மன் கோவிலுக்கு,|மதுரை ஐயப்ப சேவா சங்கம் கோவை குரு சபரியாத்திரை சார்பில் ஐயப்பன் விக்ரகம் கொண்டுவரப்பட்டது. ஐயப்பனுக்கு, 18 படி அமைத்து அதில் மலர்கள், எலுமிச்சை வைத்து படி பூஜை செய்யப்பட்டது. லட்சார்ச்சனை நடந்தது. விநாயகர்,முருகன், ஐயப்பன் பஜனை பாடல்கள் பாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.