சிவகாசி: சிவகாசி சிவன் கோயில், முருகன் கோயில், கடைக் கோயிலில் திருவாதிரை திருவிழா கொண்டாடப்பட்டது. சிவன் கோயிலில் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்டு கோயில் வளாகத்திலேயே பக்தர்களுக்கு உலாவந்து காட்சியளித்தார். முருகன் கோயில் மற்றும் கடைக்கோயிலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் மஞ்சள் சிவந்திப்பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் நான்கு ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தார். அந்தந்த கோயில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.