பதிவு செய்த நாள்
21
டிச
2021
01:12
பெ.நா.பாளையம்: இடிகரை வில்லீஸ்வரர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இடிகரையில் வேதநாயகி உடனமர் வில்லீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு கடந்த, 17ம் தேதி வாஸ்து பூஜையுடன் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது. தொடர்ந்து, 18ம் தேதி மகா கணபதி ஹோமம், அபிஷேகம், ஆராதனை நடந்தன. மாலை பிச்சாடனர் திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை, 9:00 மணிக்கு வேதநாயகி உடனமர் வில்லீஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், மாலை, 6:00 மணிக்கு வீல்லீஸ்வரர் ரிஷப வாகனத்திலும், வேதநாயகி அன்னப்பட்சி வாகனத்திலும், திருவீதி உலா வந்தனர். நேற்று, காலை, 4:00 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு சிறப்பு மகா ஆருத்ரா அபிஷேகம், ஆராதனை, திருவீதி உலாவும் நடந்தது. இன்று, காலை, 9:00 மணிக்கு சந்திரசேகர், உமா மகேஸ்வரி திருவீதி உலா நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் ஆருத்ரா தரிசன விழா குழு மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்தனர்.