பதிவு செய்த நாள்
06
ஜூலை
2012
11:07
திருநெல்வேலி : ராஜவல்லிபுரம் ஐயப்பன் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. ராஜவல்லிபுரம் ஐயப்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 2ம் தேதி இரவு விக்னேஷ்வர பூஜை, தேவதா அனுக்ஞையுடன் துவங்கியது. 3ம் தேதி காலை கணபதிஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி மற்றும் கோ பூஜையும், மாலையில் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப்பணம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக சாலை பூஜையும், இரவு பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனையும் நடந்தது. 4ம் தேதி காலை 2ம் கால யாக சாலை பூஜை, பூர்ணாஹூதி, அஷ்டபந்தன மருந்து சாத்துதலும், மாலையில் 3ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை விசேஷ சந்தி, நான்காம் கால யாக சாலை பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்சாஹூதி, மகா பூர்ணாஹூதி நடந்தது. மதியம் மூலவர், பரிவார விமான கும்பாபிஷேகமும், ஐயப்ப சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் மற்றும் மகேஸ்வர பூஜை நடந்தது. இரவு விசேஷ அலங்கார தீபாராதனை ஐயப்ப சுவாமி வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை கோபால் மற்றும் ராஜவல்லிபுரம் ஐயப்பன் திருப்பணி குழு பக்தர்கள் செய்திருந்தனர்.