‘நான் குளித்தேன். நான் சாப்பிட்டேன்’ என்று சாதாரண பேச்சில் கூட ‘நான்’ என்ற வார்த்தையை பயன்படுத்த மாட்டார் துறவியான ராமதாசர். ‘ராமன் குளித்தார், ராமன் சாப்பிட்டார், ராமன் ஊருக்கு செல்லப் போகிறார்’ என்று தான் சொல்வார். “இப்படி பேசினால் உங்களைப் பைத்தியம் ஊரார் நினைப்பார்களே” என கேலி பேசிய போதும் அவர் வருந்தவில்லை. மாறாக அப்போது ‘ராமன் அவமானப்படுத்தப்பட்டார்; ராமன் மனம் வருந்துகிறார்’ என்றே பதிலளிப்பார்.