இடுப்பில் குழந்தையுடன் உள்ள அம்மனை இங்கு ‘இசக்கியம்மன்’ என்பர். குழந்தைகளை காக்கும் தெய்வமாக இவள் கருதப்படுகிறாள். நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகிலுள்ள திருவெண்காட்டில் ‘இடுக்கி அம்மன்’ சன்னதி உள்ளது. திருஞானசம்பந்தர் இங்கு வந்த போது, செல்லும் வழியெல்லாம் சிவலிங்கம் மண்ணில் புதைந்து கிடப்பதை அறிந்தார். அதனால் கால் வைக்க அஞ்சிய போது, பார்வதி சம்பந்தரை இடுப்பில் சுமந்து சென்றாள். இடுப்பில் இடுக்கிக் கொண்டதால் ‘இடுக்கி அம்மன்’ என பெயர் வந்தது.