பதிவு செய்த நாள்
10
ஜன
2022
11:01
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன்ஊத்துக்குளி கரிவரதராஜப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா, வரும், 13ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி அதிகாலை, 5:00 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.அதிகாலை, 5:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரையிலும், மாலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரையிலும், கோவில் திறந்து இருக்கும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி கோதண்டராமர் கோவிலில் வரும், 13ம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதிகாலை, 4:30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது.சொர்க்க வாசலில் கட்டுவதற்கு தேவையான தானியம், காய், கனி வகைகள், பூமாலைகள், வஸ்திரங்கள், அன்ன பிரசாதம் செய்வதற்கு தேவையான பொருட்கள், பூஜைக்கு தேவையான பொருட்களை கொடுக்கலாம் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.