காரைக்கால்: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் காரைக்காலில் சுற்றுலாப்பயனிகள் வரத்து குறைவு இதனால் பல கோவில்களில் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பல இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. நேற்று தமிழகத்தில் முழுஊரடங்கு உத்தரவால் காரைக்காலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் வருகை இல்லாமல் திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோவில்,அம்பகரத்தூர் பத்தரகாளியம்மன் கோவில்,அம்மையார் கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோவில்களில் சுற்றுலாப்பணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் தமிழகத்தில் ஒட்டியுள்ள பூவம் நண்டலாறு,வாஞ்சூர் சோதனைச்சாவடி, அம்பகரத்தூர் உள்ளிட்ட முக்கிய சோதனைச் சாவடிகளில் உள்ள மதுக்கடைகள் குடிமகன்கள் வருகை இல்லாமல் பல மதுக்கடைகள் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது. மேலும் தமிழக பேருந்து சேவை இல்லை மாவட்டத்தில் உள்ளூர் பேருந்து மட்டும் இயக்கப்பட்டது.இதனால் காரைக்காலில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள் தங்குதடையின்றி வாங்கிசென்றனர். பொது இடத்தில் செல்லும் பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணியவேண்டும் என்று போலீசார் ஒலிப்பெறிக்கி மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.