நாகர்கோவில் நாகராஜா கோயில் தைத்திருவிழா தொடங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2022 11:01
நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகர்கோவில் நாகராஜா கோயிலில் நாகர் மூலவர் பிரதிஷ்டை யாக உள்ளது. இங்குள்ள புற்றுமண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஓலை கூரையின் கீழ் மூலஸ்தானம் அமைந்துள்ளது இக்கோயிலின் சிறப்புகளில் ஒன்றாகும். குழந்தை வரம் வேண்டி பெண்கள் இங்கு நாகருக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்துகின்றனர். இங்கு நடைபெறும் தை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலையிலும் மாலையிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 18-ம் தேதி தைப்பூச நாளில் தேரோட்டம் நடைபெறும். 19-ம் தேதி பத்தாம் நாள் ஆராட்டுடன் விழா நிறைவு பெறும்.