தூத்துக்குடி: சாயர்புரம் அருகேயுள்ள நட்டாத்தி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா நடந்தது.நட்டாத்தி மாரியம்மன், உச்சினிமாகாளி அம்மன் மற்றும் ஜமின்விநாயகர் வருஷாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக பொறுப்பாளர் எஸ்.வி. பி.எஸ்.செந்தில்குமார் தம்பதியர் மற்றும் ஜெயகுமார் தம்பதியர் சங்கல்பம் செய்திட கணபதிஹோமம், கும்பபூஜை, யாகசாலைபூஜை, பூர்ணாகுதியும், பின்பு வருஷாபிஷேகம், அலங்காரம் சிறப்பு பூஜை நடந்தது. பின்பு அன்னதானம் நடந்தது.