* பிறர் மீது அன்பு காட்டு. சிறப்பான வாழ்க்கை அமையும். * நன்மை எது, தீமை எது என்பதை அறிந்து நன்மை செய்பவரே பெருமைக்குரியவர் ஆவார். * உயிர்கள் மீது இரக்கம் காட்டுபவரே உயர்ந்தவர். * தர்ம பாதையில் செல். அது உனக்கு சிறப்பையும், செல்வத்தையும் கொடுக்கும். * நல்ல மனதுடன் இரு. அதுவே எல்லாவற்றையும் விட சிறந்தது. * நல்லதை செய். நீ இறந்த பிறகு கூட உனது செயலால் நிலைத்து நிற்பாய். * திருமணம் செய்பவனே குழந்தைகள், பெற்றோர், உறவினருக்கு உதவுவான். * நல்ல பண்பு உடைய குழந்தையை பெற்றால் உனக்கு எந்த பிறவியிலும் துன்பம் வராது. * பிறந்த, புகுந்த குடும்பத்திற்கு பெருமை சேர்த்து, கணவரின் வருவாய்க்கு ஏற்ப வாழ்பவளே சிறந்த மனைவி. * நல்ல குணம் கொண்ட மனைவி அமைந்துவிட்டால் உனக்கு வேற என்ன தேவை. * பொருளை இழந்தால் அதை மீண்டும் பெறலாம். அருளை இழந்தால் அதை பெறவே முடியாது. * நிலையில்லாத பணத்தை கொண்டு நிலையான தர்மத்தை செய். * யார் எது சொன்னாலும் அதில் உள்ள உண்மையை அறிந்துகொள். * அம்மாவின் பசியை போக்குவதற்காகக்கூட தீய செயல்களை செய்யாதே. * நாட்டில் நிகழும் நன்மை, தீமைகளை ஆராய்ந்து ஆட்சி செய்யாதவர் நாள்தோறும் நாட்டை இழக்க நேரிடும்.