* பசியால் துன்பப்படும் உயிர்களுக்கு உணவு கொடு. இதுவே தர்மத்தில் சிறந்தது. * ஜாதி, சமயம், இனம், நிறம், நாடு, மொழி, நாகரிகம் ஆகிய எந்த வகையிலும் பேதம் பார்க்காதே. * அன்பு, இரக்கத்தை அடிப்படையாக கொண்டு வாழ்ந்தால் நிச்சயம் கடவுள் உனக்கு அருள்புரிவார். * மரங்களை அழிக்காதே. * எல்லாம் கடவுளின் செயல் என்று அறிந்தால் துன்பம் வராது. * மெதுவாக பேசு. இது உனது ரகசியங்களை பாதுகாக்கும். * பறவைகளை கூண்டில் அடைத்து அவற்றை துன்புறுத்தாதே. * நீ செய்த புண்ணியத்தால் உனக்கு மனித பிறவி கிடைத்துள்ளது. அதை சரியாக பயன்படுத்து. * பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு பொய் சொல்லாதே. * ‘எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும்’ என கடவுளிடம் வேண்டிக்கொள். * நல்லவர்களின் மனம் நடுங்கும்படி செயல்படாதே. * உண்மையை பேசு. உனது வார்த்தைக்கு மதிப்பு கூடும். * பணம் மட்டுமே வாழ்க்கை என நினைக்கும் நபர்களுடன் நட்பு கொள்ளாதே. * எப்போதும் பொதுநோக்கத்துடன் செயல்படு. * அனைவரிடமும் நல்ல விதமாக பேசி புண்ணியத்தை தேடு.