பழநி: பழநி மலைக்கோயில் கிரிவீதியில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். பழநி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை புரிகின்றனர். இதில் பக்தர்கள் காவடி, தீர்த்தம், எடுத்தல், அலகு குத்துதல், முடியிறக்குதல், உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதில் சேலம் மாவட்டம் அட்டியம்பட்டியை சேர்ந்த மணிகண்டன், கண்ணன் இருவரும் கிரிவீதியில் சுற்றி அங்கப்பிரதட்சணம் செய்தனர். கோயிலில் பக்தர்கள் அனுமதியில்லாததால் கிரி வீதியில் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.