கீழக்கோவில்பட்டியில் சங்க கால சிறு வீட்டுப் பொங்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2022 05:01
வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே சங்க இலக்கியங்களில் காணப்படும் சிறு வீட்டுப் பொங்கல், பூ எருவாட்டி எனும் பெயர் மாற்றத்தோடு நடந்து வருகிறது.
கீழக்கோவில்பட்டியில் தலைமுறை தலைமுறையாக சங்க இலக்கியங்களில் காணப்படும் சிறு வீட்டுப் பொங்கல் எனும் இளம் பெண்கள் பொங்கல் கொண்டாடும் வைபவம் பூ எருவாட்டி எனும் பெயரில் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. மார்கழி மாதத்தில் வாசலில் வைக்கப்படும் பூசணிப் பூக்கள், இளம் பெண்களால் பூ எருவாட்டியாக உருவாக்கப்படுகிறது. நேற்று தேங்காய், வாழைப்பழத்தட்டில் பூ எருவாட்டிகளை வைத்து கிராமக் கோயில் முன் வட்டமாக வைத்து கும்மியடித்து மருதா ஆற்றுக்கு எடுத்துச் எடுத்துச் சென்றனர். ஆற்றங்கரையில் பூ எருவாட்டிகளுக்கு பூஜைகள் செய்து பூ எருவாட்டி மீது சூடமேற்றி அவற்றை ஆற்றில் மிதக்க விட்டனர். கிராமத்தினர் கூறுகையில்," தலைமுறை தலைமுறையாக நாங்கள் இம்முறையை கடைபிடித்து வருகிறோம். பருவநிலை மாற்றங்களால் கால்நடைகளுக்கு நோய் வராமல் பாதுகாக்க இயற்கையை வேண்டி ஆற்றில் மிதக்க விடுகிறோம்" என்றனர்.