தெய்வங்களின் விக்கிரகத்துக்குச் சந்தனமிடுவது, பூ சார்த்தி அர்ச்சனை செய்வது, தூபம் காட்டுவது, தீபாராதனை செய்வது, நைவேத்தியம் செய்து படைத்த பிறகே உண்ணுவது- இந்த ஐந்து முறைக்கும் பஞ்சோபசாரம் என்று பெயர். இதில் சந்தனம் என்பது நிலத்தையும், பூ ஆகாயத்தையும், தூபமிடுவது காற்றையும், தீபாராதனை நெருப்பையும், நைவேத்தியமானது நீரையும் குறிக்கும். ஆக, பஞ்சோபசாரம் செய்வதன் மூலம் இறைவனையும் பஞ்ச பூதங்களையும் திருப்தி செய்த பலன் கிடைக்கும்.