கோட்டை முனியப்பன் கோயிலில் மண்டல பூஜை: சுவாமி வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜன 2022 08:06
வடமதுரை: வடமதுரை மேற்கு ரத வீதி அருகே பாரம்பரியமிக்க கோட்டை முனியப்பன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது. அப்பகுதியினர் திருப்பணி செய்து கடந்த டிச.10ல் நடத்தினர். தொடர்ச்சியாக 48ம் நாள் மண்டல பூஜை நேற்று நடந்தது. திருமஞ்சனம், யாகசாலை பூஜைகளை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலையில் மின் அலங்கார ரதத்தில் சுவாமி நான்கு ரத வீதிகள் வழியே வீதியுலா வந்தார்.