ஸ்ரீரங்கம் கோயிலில் ராமாயணம் அரங்கேற்றம் செய்துகொண்டிருந்தார் கவிச்சக்கரவர்த்தி. நரசிம்மர் அவதாரத்தையும் விவரித்த கம்பர் தூணைப் பிளந்து நரசிம்மர் வெளிவந்த நிகழ்வை, அண்டம் கீறிச் சிரித்தது செங்கண் சீயம் என விளக்கினார். உடனே, சிங்கம் எப்படிச் சிரிக்கும் எனச் சிலர் ஏளனம் செய்தார்கள். அப்போது இடிமுழக்கம் போன்று சிரிப்பொலி கேட்டது. அந்தச் சிரிப்பொலி வந்த திசையை நோக்கியவர்கள், அப்படிச் சிரித்தது ஸ்ரீரங்கம் கோயிலில் சன்னதி கொண்டிருக்கும் மேட்டழகிய சிங்கரே என்பதை உணர்ந்து சிலிர்த்தனர். ஏளனம் செய்தவர்கள் கவிச் சக்கரவர்த்தியிடம் மன்னிப்பு வேண்டினர். இன்றும் இந்த மேட்டழகிய சிங்கரை சிரித்த கோலத்தில் தரிசிக்கலாம்!