காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா; லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2026 01:03
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்தும் தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழா கடந்த மார்ச் 10 ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா நடந்தது. தொடர்ந்து, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. சிறுமிகளுக்கு முதலாவதாக காப்பு கட்டியதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினார். நேற்று கோயில் கரகம், மது முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. முக்கிய திருவிழாவான பால்குடத் திருவிழா மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் முத்தாலம்மன் கோவிலில் இருந்து முத்துமாரியம்மன் கோயிலுக்கு பால்குடம் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து கோயில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான புத்தகங்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலையில் கோயில் கரகம் பருப்பூரணியில் சேர்த்தல் நிகழ்ச்சியும் இரவு காப்பு பெருக்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று அம்மன் திருவீதி உலாவும், நாளை சந்தன காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.