பதிவு செய்த நாள்
31
ஜன
2022
11:01
புதுச்சேரி : கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில், வில்லியனுார் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது.
புதுச்சேரி ஒருங்கிணைந்த சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில், கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பாதயாத்திரை நேற்று நடைபெற்றது.காந்தி வீதியில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து பாதயாத்திரை புறப்பட்டது.மேலமங்கலம் சுத்தாத்துவித சைவ ஆதினம் குமாரசாமி தேசிக தம்பிரான் அருளாசி வழங்கி, துவக்கி வைத்தார். பாதயாத்திரை காந்தி வீதி, நேரு வீதி, காமராஜர் சாலை, ராஜிவ் சதுக்கம், வழுதாவூர் சாலை, மேட்டுப்பாளையம், அரும்பார்த்தபுரம் வழியாக வில்லியனுாரில் உள்ள திருக்காமேஸ்வரர் கோவிலை சென்றடைந்தது.பாதயாத்திரையில் பங்கேற்றவர்கள் உலக மக்கள் நலம் பெற வேண்டி திருமுறைகள் ஓதியும், கையிலாய வாத்தியங்கள் இசைத்தபடி சென்றனர்.