தனுஷ்கோடியில் கங்கை தீர்த்தம் விற்பனை : தபால்துறை அசத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01பிப் 2022 06:02
ராமேஸ்வரம்: தனுஷ்கோடியில் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு கங்கை தீர்த்தம் விற்பனையை, தபால்துறையினர் துவக்கி சாதித்தது.
1964ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலில் தபால் நிலைய கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானது. அன்று முதல் அங்கு தபால் சேவை துவக்க மத்திய அரசு முன்வரவில்லை. இந்நிலையில் 2017ல் தனுஷ்கோடியில் கிளை தபால் நிலையம் துவக்கிய நிலையில், நேற்று தை அமாவாசை யொட்டி தனுஷ்கோடி, அரிச்சல்முனையில் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தபால் துறையினர் புனித கங்கை தீர்த்தம் பாட்டில் விற்பனையை ராமநாதபுரம் தபால்துறை கோட்ட கண்காணிப்பாளர் சித்ரா துவக்கி வைத்தார்.
பின் கோட்ட கண்காணிப்பாளர் சித்ரா கூறியது : 57 ஆண்டுக்கு பின் தனுஷ்கோடியில் தபால்துறை சார்பில் புனித கங்கை தீர்த்தம் விற்பனை துவக்கியது சாதனையாகும். இத்தீர்த்தம் ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, பார்த்திபனூர், ஆர்.எஸ்., மங்கலம் தபால் நிலையத்தில் கிடைக்கும். மேலும் தனுஷ்கோடியில் வங்கி சேவை மற்றும் மாவட்டத்தில் உள்ள தபால் நிலையத்தில் இலவசமாக புதிய ஆதார் கார்டு, திருத்தம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் கார்டு வழங்குகிறோம். இதன் மூலம் மக்களுக்கு விபத்து காப்பீடு ரூ. 2 லட்சம் எளிதில் கிடைக்கும். எனவே தபால் நிலைய சேவையை மக்கள் யன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.