பதிவு செய்த நாள்
04
பிப்
2022
10:02
துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வரும் 7ம் தேதி மாசித்திருவிழா துவங்குகிறது. திருவிழா காலங்களில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை
வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என்று திரு விழா ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், மாசித் திருவிழா 07.02.2022 முதல் 18.02.2022 வரை12 தினங்கள் கொண்டாடப்படவுள்ளது. மாசித் திருவிழா நிகழ்ச்சியில் தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பக்தர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைத்திடவும், சுகாதார முறையில் விநியோகம் செய்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். திருவிழா காலங்களில் தொற்று வியாதிகள் பரவாமல் தடுக்கும் வகையிலும் மருத்துவ குழுவினரை நியமித்து 24 மணி நேர ஆம்புலன்ஸ் வசதியுடன் அவசர மருத்துவ சிகிச்சைவழங்குவதற்கு பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறையினர் நடவடிக்கைஎடுக்கவேண்டும். தேவையான அளவு போக்குவரத்து வசதிகள், தேரோட்டம் அன்று தேருக்கு முன்பும் பின்பும் பாதுகாப்பு வளையங்கள் அமைத்து தேரோட்டம் சிறப்பாக நடைபெற உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திட வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பழுதடைந்தசாலைகளைசீரமைத்திட நெடுஞ்சாலைத்துறையினருக்கும், பழுதான தேர்கள் சீரமைத்திடவும், தெப்பதேர்களின் கட்டமைப்புகளை உறுதி செய்திடவும் பொதுப்பணித்துறையினருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் எஸ்பி., ஜெயக்குமார், மாவட்டவருவாய் அலுவலர் கண்ணபிரான், மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் அமுதா, இந்து அறநிலையத்துறை இணைஆணையர் குமரதுரைமற்றும் அ னைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.