கமுதி: கமுதி அருகே நாராயணபுரம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் கோயில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது.மேலக்கொடுமலூர் சிவாச்சாரியார் நவநீதன் குருக்கள் தலைமையில் காலை 5.00 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்கி கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.பின்பு கும்ப அலங்காரம் புறப்பாடு செய்யப்பட்டு பின்பு புனித நீர் ஊற்றப்பட்டது. சித்தி விநாயகருக்கு பால்,தயிர்,சந்தனம், பஞ்சாமிர்தம் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது. சித்திவிநாயகர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாரதனை நடந்தது. கிராம மக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.