பதிவு செய்த நாள்
05
பிப்
2022
05:02
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, கொண்டேகவுண்டன்பாளையம் சர்க்கரை விநாயகர் கோவில், நாளை கும்பாபிேஷகம் நடக்கிறது.பொள்ளாச்சி, கொண்டேகவுண்டன்பாளையத்தில் சர்க்கரை விநாயகர் கோவிலில் கும்பாபிேஷக விழாவையொட்டி, புதிதாக கர்பகிரஹம், அர்த்த மண்டபம் கட்டப்பட்டு, விமான வர்ணகலாபங்கள் அமைத்து, சைவ ஆகமப்படி மகா கும்பாபிேஷகம் நாளை நடக்கிறது.நேற்று மங்கள இசையுடன் விழா துவங்கியது. கணபதிேஹாமம், நவக்கிரக ேஹாமம், மகாலட்சுமி ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கோபுர கலசம் வைத்தல், வாஸ்துசாந்தி பூஜை நடந்தது.மாலை, 5:00 மணிக்கு முதற்கால யாக பூஜை மற்றும் சர்க்கரை விநாயகருக்கு எண் வகை மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.இன்று காலை, 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, சூர்ய, சோம கும்ப பூஜை, மண்டபார்ச்சனை, ேஹாமம் உள்ளிட்ட பூஜைகளும், மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது.நாளை காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, நாடிசந்தானம் உள்ளிட்ட பூஜைகளும், காலை, 8:30 மணிக்கு விமான கும்பாபிேஷகம், மூலவர் கும்பாபிேஷகம், தச தரிசனம், மகா அபிேஷகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.