தியாகராஜர் ஆராதனை இசை அஞ்சலி செலுத்திய ஈஷா மாணவர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2022 07:02
கோவை: ராம் நகரில் நடந்த தியாகராஜ ஆராதனையில் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜ சுவாமிகளுக்கு ஈஷா சமஸ்கிரிதி மாணவர்கள் இசை அஞ்சலி செலுத்தினர்.
தென்னிந்திய இசைக்கு அளப்பரிய சேவை ஆற்றிய தியாகராஜ சுவாமிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தி பாடல்கள் இயற்றியுள்ளார். அவரின் சேவைக்கு நன்றி செலுத்தும் விதமாக கோவை, ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமர் கோவிலில் தியாகராஜர் ஆராதனை விழா பிப்., 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று ஈஷா சமஸ்கிரிதி மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில், 21 மாணவர்கள் பங்கேற்று இசை அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சீதாபதி, மணிவர்ணா மற்றும் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை பாடி அசத்தினர். நிகழ்ச்சியில் பேசிய எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா," தியாகராஜ சுவாமிகள் தனது இசைக் கீர்த்தனைகள் இறைவனை பாடி வழிபட்டார். அந்த கீர்த்தனைகளை ஈஷா மாணவர்கள் இன்று அர்ப்பணித்துள்ளனர். ஈஷா மாணவர்கள் இசை மட்டுமின்றி பரதநாட்டியம், களரி, யோகா தியான கலைகள் உள்ளிட்டவை முறையாக கற்றவர்கள். தியாகராஜர் ஆராதனை பல இடங்களுக்கும் பரவும் வகையில் மாணவர்கள் தங்களின் இசை அர்ப்பணிப்பை செய்துள்ளனர்," என்றார்.