கோவில்களில் கர்ப சம்ஸ்கார் கர்ப்பிணியருக்கு மரியாதை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2022 05:02
பெங்களூரு:கர்ப்பிணியருக்கு புதிதாக, கர்ப சம்ஸ்கார் என்ற திட்டம் கோவில்களில் செயல்படுத்தப்படும், என, அறநிலைத்துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே கூறினார். குக்கே தாலுகாவிலுள்ள சுப்ரமணியா கோவிலை பார்வையிடும்போது அறநிலைத்துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது:ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கர்ப்பிணியர் அங்குள்ள அறநிலைத்துறை கோவிலுக்கு அழைக்கப்பட்டு, அர்ச்சகர்கள், பண்டிதர்கள் மற்றும் சில கணித வல்லுனர்களை வைத்து, ஒரு நாள் பயிலரங்கம் நடத்தப்படும்.அவர்களுக்கு மஞ்சள், மஞ்சள் துாள் வழங்கப்படும். கருவில் உள்ள குழந்தை பிறப்பதற்கு முன்பே ஞானம் பெறுவதற்கான சிறப்பு வழிபாடாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அறநிலையத் துறைக்கு உட்பட்ட ஏ, பி கிரேடு கோவில்களில் தணிக்கை அறிக்கை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.கடந்த பல ஆண்டுகளாக ஒரு சில கோவில் நிர்வாகங்கள் மட்டுமே முறையாக இதை பின்பற்றுகின்றன.விடுபட்டுள்ள கோவில் நிர்வாகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்குள் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்காத கோவில் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.