பதிவு செய்த நாள்
12
பிப்
2022
05:02
திருவொற்றியூர் :தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான சந்திரசேகரர் திருத்தேர் உற்சவம், நாளை நடக்கிறது.சென்னை, தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் 2,000 ஆண்டுகள் பழமையானது. ஆண்டுதோறும், மாசி மாதம், ௧௦ நாள் பிரம்மோற்சவ திருவிழா நடப்பது வழக்கம்.இவ்வாண்டு, ம் தேதி, கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோற்சவ திருவிழா துவங்கியது. தொடர்ந்து, விழா நாட்களில், உற்சவர் சந்திரசேகரர் சூரிய பிரபை, சந்திர பிரபை, பூதம், சிம்மம், சர்பம், ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதிகளில் உலா வந்தார்.நேற்று காலை, உற்சவர் சந்திரசேகரர் அதிகார நந்தி வாகனம், இரவு அஸ்தமானகிரி விமானம், இன்று யானை மற்றும் புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மாடவீதி உலா கண்டார்.விழாவின், மிக முக்கிய நிகழ்வான சந்திர சேகரர் திருத்தேர் உற்சவம், நாளை காலை 7:30 முதல் 9:00 மணி வரை நடக்கிறது.ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர் என்பதால், கோவில் நிர்வாகம் தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேரோட்டத்திற்ககாக, தேர் மராமத்து மற்றும் வர்ணம் பூசும் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.