எந்த நல்ல விஷயம் என்றாலும் கணபதி ஹோமம் நடத்தலாம். குறிப்பாக, புதுவீடு கட்டி பால்காய்ச்சும் போது இதனை நடத்த வேண்டும். சதுர்த்தி, செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி, மாதப்பிறப்பு நாட்களில் நடத்துவது சிறப்பு. அதிகாலை 4.30-6 மணிக்குள் நடத்துவதே உத்தமம். ஹோம அக்னியில் ஆகுதியாக இடப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பலன் உண்டு. கொழுக்கட்டை- வெற்றி, நெல்பொரி- திருமணம் கைகூடுதல், தேன்- கடன் நீங்குதல், அருகம்புல், நெய்- செல்வ வளம். கணபதி ஹோமத்தை நடத்துபவருக்கு மட்டுமில்லாமல் அதில் பங்கு பெறுபவருக்கும், சுற்றியுள்ள வீட்டாருக்கும் நன்மை சேரும். அதனால், உறவினர்கள் இல்ல கிரகப்பிரவேசங்களுக்கு அதிகாலையே சென்று கணபதி ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள்.