தீர்த்தவாரியுடன் திருக்கோஷ்டியூர் தெப்ப உத்ஸவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2022 10:02
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள்கோயிலில் நடைபெற்ற மாசித் தெப்ப உத்ஸவத்தை முன்னிட்டு நேற்று நடந்த தீர்த்தவாரியுடன் உத்ஸவம் நிறைவடைந்தது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் 11 நாட்கள் தெப்ப உத்ஸவம் நடைபெறும்.. பிப்.,7 ல் கொடியேற்றப்பட்டு உத்ஸவம் துவங்கியது. தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. ஒன்பதாம் திருநாளில் வெண்ணெய்த்தாழி கண்ணன் திருக்கோலத்தில் முட்டுத்தள்ளுதலும், நேற்று முன்தினம் காலையிலும், இரவிலும் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பம் கண்டருளலும் நடந்தது. நேற்று காலை 7:00 மணிக்கு பெருமாள் கோயிலிருந்து புறப்பாடாகி தெப்பம் மண்டபம் எழுந்ருளினார். தொடர்ந்து காலை 10:00 மணிக்க தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து தீர்த்தவாரி நடந்தது. பின்னர் சக்கரத்தாழ்வார் மண்டபத்தில் பெருமாள் அருகில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்றும் குளத்தைச் சுற்றிலும் பெண்கள் தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தனர். இரவு9:30 மணிக்கு பெருமாள் மண்படத்திலிருந்து புறப்பாடாகி கோயிலில் ஆஸ்தானம் சென்றடைந்தார். தொடர்ந்து பதினொரு நாள் தெப்ப உத்ஸவம் நிறைவடைந்தது.