பதிவு செய்த நாள்
20
பிப்
2022
07:02
குடகு, : குடகில் 700 நாட்களுக்கு பின், குஷால் நகரில் உள்ள பொற்கோவில் மார்ச் 3 முதல் பார்வையாளர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.குடகு மாவட்டத்தில், குஷால் நகர் பைலகுப்பேவில் பொற்கோவில் என்றழைக்கப்படும் பழமையான மடாலயம் உள்ளது.கொரோனா பாதிப்பு துவங்கிய நாள் முதல், இந்த கோவில் உள்ளே செல்ல, பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
மாநில அளவில் பல இடங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் செல்ல தடைவிதிக்கப்பட்டு, பின் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.இந்த மடாலயத்துக்கு செல்ல, இதுவரை அனுமதி இல்லை. தற்போது பாதிப்பு குறைந்துள்ள காரணத்தால், 700 நாட்களுக்கு பின், மார்ச் 3 முதல் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க, மடாலய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.நிர்வாகத்தினர் கூறியதாவது:மடாலயத்தில் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட அனைத்து துறவிகளும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.வயதான துறவிகள், முன்களப் பணியாளர்களுக்கு, பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளது.பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக பின்பற்றுவதால், பொதுமக்களுக்கு மார்ச் 3 முதல், வழிபடுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.தொற்று அதிகரிக்கும் பட்சத்தில், மடாலயம் மீண்டும் மூடுவதற்கும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.