கோவில்பட்டி புற்று கோயிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2022 06:02
கோவில்பட்டி: கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது. விழாவில் கணபதி பூஜையுடன் தொடங்கி, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்னாகுதி தீபாராதனை நடைபெற்றது. விநாயகருக்கு மாலை, மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சமூக இடைவெளி கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.