கச்சதீவு திருவிழாவுக்கு 200 பக்தர்கள் அனுமதிக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24பிப் 2022 11:02
ராமேஸ்வரம்: கச்சதீவு அந்தோனியார் சர்ச் திருவிழாவிற்கு தமிழகத்தில் இருந்து 200 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மார்ச் 11, 12ல் கச்சதீவு திருவிழா நடைபெற உள்ளது. கொரோனா பரவலால் விழாவில் இரு நாட்டு பக்தர்கள் பங்கேற்க இலங்கை அரசு தடை விதித்தது. இதனால் தமிழக பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்திய, இலங்கையில் இருந்து தலா 50 பக்தர்கள் பங்கேற்கலாம் என இலங்கை அரசு தெரிவித்தது. இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்க செயலாளர் சகாயம் கூறியதாவது : கச்சதீவு திருவிழா இருநாட்டு பக்தர்கள் பாரம்பரியமாக கொண்டாடி வரும் நிலையில், இந்தாண்டு குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதித்தது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே விழா சிறப்பாக அமைய இரு நாட்டில் இருந்தும் தலா 200 பக்தர்களை அனுமதிக்க மத்திய அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்றார்.