புதுச்சேரி: ஆவணி அவிட்டம் தோஷம் சம்பவிப்பதால் முன்கூட்டியே ஆடிமாதம் கணிக்கப்பட்டுள்ளது. பிராமண நலச்சங்கத் தலைவர் கல்யாணம் வெளியிட்டுள்ள அறிக்கை: இவ்வருடம் ஆவணி மாதத்தில் வரக்கூடிய ஆவணி அவிட்டம் தோஷம் சம்பவிப்பதால் சாஸ்திர வல்லுனர்களால் முன் கூட்டியே ஆடி மாதம் கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆவணி அவிட்டம் சாம வேதம் வரும் 24ம் தேதியும், யஜூர்வேதம் ஆகஸ்ட் 1ம் தேதியும், ரிக் மற்றும் காயத்ரி ஜபம் ஆகஸ்ட் 2ம் தேதியும் அந்தந்த வேதத்தைச் சேர்ந்தவர்கள் அந்தந்த தினத்தில் புதியதாக பூணூல் மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு ராஜா சாஸ்திரிகளை 98423 29770, 98423 27791 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.